செய்தி: தமிழகத்தில் தொழில் நுட்ப கல்விக்கான நுழைவுத்தேர்வு ரத்து. இனி பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே அட்மிஷன் நடைபெறும். ஒத்த மதிப்பெண் எடுத்த மாணாக்கர்கள் வயது மற்றும் பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுவர். வயதில் மூத்தோர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
--------------------------->
இந்த செய்தியால் தமிழகத்தில் நடக்கப்போகும் நிகழ்ச்சிகள்.
1)இடம்: குழந்தை பிறந்த வீட்டில்...
தந்தை உறவினரிடம்: "ஏங்க குழந்தைக்கு ஒரு நல்ல பேர் சொல்லுஙக..."
உறவினர்: "வாயில நுழையிற மாதிரி பேர் வேன்டுமா இல்ல இஞ்ஜினியரிங் காலேஜில் நுழையிற மாதிரி பேர் வேன்டுமா?"
த: "இது என்ன புதுக்கதை கொஞ்சம் வெவரமா சொல்லுங்க"
உ: "வாயில நொழையிற மாதிரி பேருன்னா 'சரவணன்', 'சண்முகம்' ணு பெயர் வைக்கலாம், இஞ்ஜினியரிங் காலேஜில் நுழையிற மாதிரி வேணும்னா A இல்ல AAனு வைக்கலாம்"
------------------------------------>
2) மூனாங்கிளாஸை மூன்றே அட்டெம்ப்டில் வெற்றி கொண்ட முகமது கஜினி வீட்டில்...
முகமது: "ஆத்தா நான் பாஸாயிட்டேன்..."
அம்மா: "சனியம்புடிச்சவனே... இன்னும் ரென்டு வருஷம் பொறுக்க முடியாது... நீ பாஸ் ஆகலண்ணு யார் அழுதா... இப்போ இஞ்ஜினியரிங் சீட் யாரு உங்கப்பனா வாங்கி கொடுப்பான்... வாய்ச்சதும் சரியில்ல... வந்ததும் சரியில்ல எல்லாம் என் தலவிதி"
மு: "ஆத்தா கவலைப்படாத நாலாங்கிளாஸை நின்னு படிச்சு சரி பண்ணிடறேன்... அதுக்காக அப்பாவோட compare பண்ணி கேவலப்படுத்தாத... வெளிய சொல்லவே கேவலமா இருக்கு... அவரு எப்டிதான் வெக்கமே இல்லாம +2 வரைக்கும் 12டே வருசத்துல படிச்சாரோ... அதுனால இஞ்ஜினியரிங் சீட்டு கெடைக்காம இப்போ குமாஸ்தாவா குப்பை கொட்டிட்ருக்கார்..."
அ: " நீயாவது உல்கந்தெரிஞ்சவனா வளந்தா சரிதான்..."